வணிக வெற்றிக்கு வழிகாட்டி

வியாபரத்தில் வெற்றி பெற

வியாபரத்தில் வெற்றி பெற பாகம்-1

நீங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் தொழில் அல்லது வியாபாரம் இன்னும் சிறப்பாக நடைபெற பின் வரும் ஐந்து செயல்பாடுகள் உள்ளனவா என்று ஆராயுங்கள் ! இல்லாததை பின்பற்றி பாருங்கள்

வெற்றிக்கு வாழ்த்துக்கள் !
1. புதிதாக ஒன்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் உங்கள் வணிகத்தில் புதிதாக ஒன்றைச் சேர்க்கும்போது அதிக விற்பனையைப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறீர்கள்.

2. உங்களது வர்த்தகத்தை மதிப்புமிக்க வளமாக மாற்றுங்கள்.

உங்கள் வாய்ப்புகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் ஒரு ஆதாரமாக இருக்கக்கூடிய வழிகளைத் தேடுங்கள். மற்றவர்களிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருக்கும் என்ற நிலையை வாடிக்கையாளர்களிடம் உருவாக்குங்கள்.
அது பொருளின் தரமாக இருக்கலாம்;
அளவு எடை சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்
உங்களது தொழில் நேர்மையாக இருக்கலாம்.
அங்கு சென்றால் ”வேகமாக வேலை முடிந்து விடலாம்” என்று இருக்கலாம்..
வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் முறையாக இருக்கலாம்.
ஏன் நீங்கள் செய்து கொடுக்கும் பேக்கிங்காக கூட இருக்கலாம்.. .

3.உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருங்கள். …

இதன் பொருள் யாதெனில் நீங்கள் உங்கள் போட்டியாளர் என்ன செய்கிறார் என்று கவனித்துக் கொண்டே இருக்காதீர்கள். இது உங்கள் சொந்த யோசனைகளை தடுத்துவிடும். பொதுவாக போட்டியாளர் செய்வதை பார்த்து அதே போல் அல்லது அதை போல் சிறிது மாற்றமாக செய்வது என்பது பெரிய அளவில் பலன் தராது. சாதாரண பாசையில் சொல்வதானால் “காப்பி அடிப்பது” தரும் வெற்றியை விட நாமே சொந்தமாக உருவாக்குவது என்பது நல்ல பலனை தரும்.

4. எந்த ஒரு செயலிலும் இறுதி முடிவை நடைமுறைப்படுத்துங்கள். …

பொதுவாக ஒரு செயலை பற்றி சிந்திக்கும்போது பல்வேறு ஆக்கங்கள் அல்லது கருத்துக்கள் உருவாகும். அவற்றில் இறுதியாக வருபவை முந்தையவற்றைவிட சிறந்ததாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில், முதலில் தோன்றுபவைகளின் மெறுகேற்றமாக அடுத்து வருபவை இருக்கும் என்பது பொதுவாக நிகழக்கூடிதாகும்.

5. எப்பொழுதும் மாற்றத்தை எதிர்பார்த்து இருங்கள்- அதற்கு தயாராக இருங்கள்.

மாற்றத்தை விரும்பவது மனித இயல்பு. மாற்றத்தை ஏற்காத எந்த தொழிலும் நீடிக்க இயலாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஏதோ ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்க வாய்ப்பு உண்டு.

உதாரணத்திற்கு டெய்லர் ஒருவர் ” எனக்கு பாவாடை சட்டை, பெல்பாட்டம் பேண்டுதான் தைக்கத் தெரியும் சுடிதார் தைக்கவெல்லாம் நான் கற்றுக்கொள்ள மாட்டேன், தேவைன்னா வா இல்லான்னா போ” என்று அடம்பிடித்தால் அவரால் தொழிலில் நீடிக்க முடியுமா ? எனவே மாற்றங்களுக்கு ஏற்ப மாற கற்றுக் கொள்பவரே வெற்றியாளர்.வெற்றி பெற வாழ்த்துக்கள்..

இவ்வலைத்தளத்தின் நோக்கமும் பதிவும் பிடித்திருந்தால், முக நூல் லைக் பட்டனை க்ளிக் செய்து விட்டு இதை மற்றவரும் படித்து பயன்பெறும் வகையில் உங்கள் “முகநூல் மற்றும் ட்விட்டர்“ மூலம் பகிர பின்வரும் பட்டனை க்ளிக்கவும்

Leave a Comment