புதியோருக்கான வழிகாட்டி

யூ டியூப்பின் மூலம் இலட்சங்கள் சம்பாதிக்க முடியுமா ?

யூ ட்யூப் இன்றைய இணையத்தில் தாரக மந்திரம். முகநூலுக்கு அடுத்தபடியாக சுமார் 200 மில்லியன் பயனார்கள் கொண்டது யூ டியூப்.

தற்போதைய ட்ரெண்ட் “ யூ டியூப் மூலம் மாதத்திற்கு இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஒரு கூட்டம் கிளம்பி இருப்பது உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும். இது எந்தளவுக்கு உண்மை ? என்பதை ஆராய முற்பட்டதின் விளைவே இக்கட்டுரை.

யூ டியூப்பின் மூலம் இலட்சங்கள் சம்பாதிக்க முடியுமா ? என்றால்…

தாராளமாக முடியும் !?

ஆனால் மற்ற தொழில்களில் சம்பாதிக்க எப்படி திறமையும் தகுதியும் வேண்டுமோ, அதைப்போல் இதிலும் தேவை. குறிப்பாக மற்ற தொழில் மற்றும் வணிகத்திற்கு தேவைப்படுவதை விட கூடுதலான அம்சங்களான படைப்பாற்றல், கற்பனை திறன், வெளிப்படுத்தும் ஆற்றல் போன்றவை இதற்கு தேவை.

மற்ற தொழில்களில் வாடிக்கையாளர்களை நாம் கண்கூடாக பார்க்க இயலும், அதன் மூலம் அவர்களை விருப்பு வெறுப்புக்களை ஓரளவு கணித்து செயல்பட முடியும். ஆனால் இங்கு நீங்கள் உருவாக்கிய ஒரு வீடியோவை யார் பார்ப்பார்கள் எங்கு இருப்பார்கள் என்பதை நீங்கள் அறிய முடியாது. உங்கள் படைப்பு

இவற்றிற்கெல்லாம் நான் தயார் என்றால் அடுத்து அதற்கு அடிப்படை தேவைகள் மற்றும் அதற்கான சட்டதிட்டங்கள் பற்றி இதோ

சாட்சாத் கூகுள் அதாவது யூ டியூப்பின் ஓனரே நீங்கள் யூ டியூப்பின் மூலம் எப்படி சம்பாதிக்கலாம், என்னென்ன தேவை என்பதை விளக்கி உள்ளார். அதன் தமிழாக்கம்

How to earn money on YouTube .(https://support.google.com/youtube/answer/72857?hl=en)

YouTube இல் நீங்கள் எப்படிப்பட்ட படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல மாட்டோம், ஆனால் எங்கள் பார்வையாளர்கள், படைப்பாளிகள் மற்றும் விளம்பரதாரர்களால் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய  பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

நீங்கள் YouTube கூட்டாளர் (Partner) திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் , YouTube மூலம் பணம் சம்பாதிக்கும் திறன் உங்களுக்கு உள்ளது என்று பொருள், இதன் மூலமாக, நாங்கள் உங்களை தரத்தை உயர்த்த விரும்புகிறோம்.

நல்ல படைப்பாளர்களுக்கு நாங்கள் வெகுமதி அளிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த, YouTube கூட்டாளர் திட்டத்தில் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு உங்கள் சேனலை மதிப்பாய்வு செய்வோம். எல்லா கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் சேனல்களை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வோம்.

YouTube கூட்டாளர் திட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள்

பின்வரும் அம்சங்கள் மூலம் நீங்கள் YouTube இல் பணம் சம்பாதிக்கலாம்:

விளம்பர வருவாய்:  

உங்கள் வீடியோக்கள் மீது காட்டப்படும் எழுத்து விளம்பரம், முழு வீடியோ விளம்பரம் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கலாம்.

சேனல் உறுப்பினர்:  

நீங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளுக்கு ஈடாக உங்கள் உறுப்பினர்கள் நீங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளுக்கு ஈடாக  தொடர்ச்சியான மாதாந்திர  கட்டணத்தின் மூலம்.

வணிக அலமாரி:

உங்கள் பதிவுகளில் காட்டப்படும் விளம்பரங்கள் மூலமாக உங்களது பார்வையாளர்கள் வாங்குகின்ற பொருட்களுக்கு அந்த வணிகர்கள் தரும் கமிஷன் மூலம் சம்பாதிக்கலாம்.

சூப்பர் சாட் மற்றும் சூப்பர் ஸ்டிக்கர்கள்:  

அரட்டை ஸ்ட்ரீம்களில் அவர்களின் செய்திகளை முன்னிலைப்படுத்த உங்கள் ரசிகர்கள் பணம் செலுத்துகிறார்கள். அதன் மூலம் சம்பாதிக்கலாம்.

YouTube பிரீமியம் வருவாய்:

உங்கள்  பதிவுகளை பார்க்கும்போது அதன் மூலம்  YouTube பிரீமியம் சந்தாதாரராக அவர்கள் சேர்ந்தால் அந்த  சந்தா கட்டணத்தின் ஒரு பகுதியைன் நீங்கள் பெறலாம்.

மேற்சொன்ன ஒவ்வொரு அம்சத்திற்கும் தனிதனித்தனியான தேவைகளை நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக பார்வையாளர்களின் எண்ணிக்கையும், வாசகர் வட்டமும் மிக முக்கியம் ஆகும்.

 உங்கள் சேனல் அல்லது வீடியோ தகுதி இல்லை என்று எங்கள் மதிப்பீட்டாளர்கள் நம்பினால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை இயக்க முடியாது. இதற்கு  மேற்சொன்ன பார்வையாளர்களின் எண்ணிக்கையும், வாசகர் வட்டமும் மிக  முக்கிய காரணிகளாகும்.

அடுத்த மிக முக்கியமான அம்சம் ஒன்று என்னவென்றால்,  ஒவ்வொரு பகுதியிலும் யூ டுயூபின் சட்டப்பூர்வமான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த  படைப்பாளிகளுக்கு நாங்கள் வெகுமதி அளிக்கும் திட்டமும் உள்ளதால், உங்கள் சேனலில் எங்களுக்கு தேவையான மற்றும் போதுமான அம்சங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – இதன் பொருள் உங்கள் ஆக்கங்கள் அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதே.

உங்கள் ஆக்கங்கள் எங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் சேனல்களை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

யூ டியூப்பின் மூலம் நீங்கள் பொருளீட்ட தேவையான குறைந்த பட்ச தகுதி மற்றும் தேவைகள்:

ஒவ்வொரு அம்சத்திற்கும் தனிதனியான  தேவைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். உள்ளூர் சட்டத் தேவைகள் காரணமாக சில அம்சங்கள் உங்கள் நாட்டில் கிடைக்காமல் போகலாம்.

மேற்படி தேவைகள் நிறைவேற்றப்பட்டால், பொருளீட்டல் அம்சங்களுடன் உங்கள் YouTube இயங்க ஆரம்பிக்கலாம்:

YouTube ல் பொருளீட்ட குறைந்தபட்ச தேவைகள்:

விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட.

குறைந்தது 18 முடிந்திருக்க வேண்டும் அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட சட்டப்பூர்வ பாதுகாவலரைக் கொண்டிருங்கள், அவர்கள் உங்கள் சார்பாக  நிகழ்வுகளை கையாள லாம்.

எங்கள் விளம்பரதாரர்களுடன் நாங்கள் கொண்டுள்ள  வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் உங்களுடைய படைப்புக்களை உருவாக்கவும்.

சேனல் உறுப்பினர்கள் சேர்ப்பதின் மூலம் வருவாய் ஈட்ட

குறைந்தது 18 முடிந்திருக்க வேண்டும் 30,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

வணிக அலமாரி மூலம் வருவாய் ஈட்ட

குறைந்தது 18 முடிந்திருக்க வேண்டும் 10,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

சூப்பர் அரட்டை & சூப்பர் ஸ்டிக்கர்கள் மூலம் வருவாய் ஈட்ட

குறைந்தது 18 முடிந்திருக்க வேண்டும்

சூப்பர் அரட்டை வசதி  கிடைக்கும் நாட்டில் நீங்கள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

YouTube பிரீமியம் உறுப்பினர்களை சேர்ப்பதின் மூலம் வருவாய் ஈட்ட..                                                            

உங்கள் சானல் பார்வையாளர்களை YouTube பிரீமியம் சந்தாதாரரார்களாக மாற்ற தேவையான படைப்புகளை உருவாக்கும் திறமை உங்களுக்கு இருக்க வேண்டும்.

YouTube Partner Program overview & eligibility (https://support.google.com/youtube/answer/72851)

இதை தொடர்பாக மேலும் விளக்கங்கள் அடங்கிய பக்கத்தின் முகவரி
YouTube Partner Program overview & eligibility (https://support.google.com/youtube/answer/72851)

யூ டியூப்பில் சேனல் ஆரம்பித்து வெற்றிகர்மாக நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் அனுபவம் பற்றி விவரிக்கும் வீடியோவை பாருங்கள் !

யூ ட்யூபில் சானல் ஆரம்பிப்பது எப்படி ? என்பது பற்றிய வீடியோ !

பிடித்திருந்தால் ” சப்ஸ்க்ரைப் பண்ணுங்க !” “ ஷேர் பண்ணூங்க !” ” பெல் பட்டன அமுக்குங்க ! என்று தொந்தரவு பண்ண மாட்டோம். வேணும்னா ஃபேஸ் புக் லைக் பட்டன் கீழே இருக்கு, அதுல ஒரு லைக் போட்டுட்டு அதாவது “க்ளிக்” பண்ணீட்டு போங்க !

Leave a Comment